MITS 360° WEALTH FOUNDATION
சர்வதேச தரத்திலான பங்குச் சந்தை கல்வி — பொருளாதாரத் தடையின்றி அனைவருக்கும் சாத்தியம்.
Democratizing World-Class Financial Education
இன்றையசூழலில் பங்குச்சந்தை கல்வி இன்று பலருக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான அறிவாக மாறியுள்ளது. ஆனால், அதை முறையாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் ஒரே மாதிரியாக கிடைப்பதில்லை. அதனால், ஆர்வமும் கற்றுக்கொள்ளும் எண்ணமும் உள்ள மாணவர்களுக்கு பங்குச்சந்தை மற்றும் நிதி தொடர்பான அறிவை ஒரு முறையான கல்வி அணுகுமுறையுடன் வழங்க வேண்டும் என்பதே MITS 360° Foundation-ன் நோக்கம். இந்த முயற்சியின் மூலம், Market Understanding, Fundamental Analysis, Technical Analysis, Price Action, Risk Management மற்றும் Investment Thinking போன்ற பல்வேறு பகுதிகளை அடிப்படையிலிருந்து நடைமுறை புரிதல் வரை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்குகிறோம். இது ஒரு குறிப்பிட்ட course-ஐ மட்டும் முடிப்பதற்கான பயணம் அல்ல. கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு மாணவரும், ஒரு தகவலை அப்படியே நம்பாமல் கேள்வி கேட்கவும், ஆராயவும், புரிந்துகொள்ளவும், அதன் பிறகு தங்களுடைய முடிவுகளை தாங்களே எடுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்.
பங்குச் சந்தை என்பது ஒரு சூதாட்டமோ அல்லது குறுக்குவழிப் பணக்காரத் திட்டமோ அல்ல. இது உழைப்பும், ஒழுக்கமும், விதிகளும் நிறைந்த ஒரு வாழ்வாதாரக் கலை. இந்தக் கல்வியை ஒவ்வொரு நடுத்தரக் குடும்பமும் கற்று தற்சார்புப் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்பதே MITS 360° வெல்த் பவுண்டேஷனின் அடிப்படை நோக்கம்.
The Learning Paradigm: Challenges vs Our Educational Approach
சந்தையைக் கற்பதில் உள்ள பொதுவான சவால்களும், MITS 360° வெல்த் பவுண்டேஷனின் அணுகுமுறையும்:
Key Hurdles in Financial Education
-
High Cost of Specialized Learning Quality market education can sometimes be difficult to access due to the cost of structured training.
-
Too Much Information, Too Little Structure Learners often come across a large amount of market information without a clear learning path.
-
Theory Without Enough Practical Context Understanding concepts becomes easier when learning is connected to real market situations and practical examples.
-
The Need for Continued Learning Market knowledge develops over time through continuous learning, practice, observation, and reflection.
100% Foundation Sponsored
-
100% Foundation Sponsored Selected eligible applicants receive their learning support through MITS 360° Foundation sponsorship, with no tuition fee.
-
Structured & Practical Learning A systematic curriculum covering market understanding, investing, trading, technical concepts, risk management, and financial awareness.
-
Learn to Understand, Not Just Follow We focus on developing the ability to understand market situations, ask the right questions, and think independently.
-
Knowledge With Social Purpose The Foundation aims to make meaningful financial and market education accessible to deserving learners and encourage them to use their knowledge responsibly.
தற்சார்புப் பொருளாதாரம்
ஒவ்வொரு நடுத்தரக் குடும்பமும் யாருடைய தவறான டிப்ஸ்களையும் நம்பாமல், சுய பகுப்பாய்வு மூலம் தங்கள் மூலதனத்தைப் பாதுகாத்து வளர்க்கும் திறன்.
நிறுவன அளவிலான அறிவு
பெரிய வங்கிகளும் நிறுவன முதலீட்டாளர்களும் கையாளும் ஆர்டர் ஃப்ளோ மற்றும் லிக்விடிட்டி நுணுக்கங்களை அனைவருக்கும் புரியும் எளிய தமிழில் வழங்குதல்.
சமூகப் பொறுப்புணர்வு
கற்றுக்கொண்ட அறிவை வெறும் தனிநபர் லாபத்தோடு நிறுத்தாமல், தங்களால் இயன்ற சிறு உதவிகளைச் சுற்றியுள்ள சமூகத்திற்குச் செய்து ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துதல்
Experience That Shapes Our Learning
Mentor Bio & Experience
Mentor Yunus Gani: 15+ ஆண்டுகளாக பங்குச்சந்தையை நேரடியாகக் கவனித்து, பல்வேறு market cycles மற்றும் சந்தை நிலைமைகளை அனுபவித்ததன் மூலம் உருவான practical understanding-ஐ மாணவர்களுடன் பகிர்வதே எங்கள் mentoring approach.
- பல்வேறு market conditions-ல் உருவான practical market understanding
- 2,000+ learners உடன் பகிர்ந்துகொண்ட learning experience
- Price Action, Market Structure, SMC மற்றும் Risk Management போன்ற concepts-ஐ எளிமையாகவும் நடைமுறையாகவும் கற்றுக்கொடுக்கும் அணுகுமுறை
Wall of Trust — Genuine Student Experiences
எங்கள் நேரலை வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள் பகிர்ந்த உண்மையான கருத்துக்கள் மற்றும் நேரடி அனுபவங்கள்.
ONE COMPLETE PATHWAY. PURE MARKET RIGOR.
Learn to Read the Market. Understand Price. Build Your Own Trade Plan.
MAPP — Market Analysis & Price Action Programme
Zero to Professional Technical Market Analysis
01 — Market Structure & Price Behaviour
வரைபடங்களை வெறும் கோடுகளாகப் பார்க்காமல், சந்தையின் உண்மையான நகர்வையும் கட்டமைப்பையும் புரிந்துகொள்ளுதல்.
02 — Price Action, Levels & Volume
Support & Resistance, Breakout நம்பகத்தன்மை மற்றும் உண்மையான சந்தைப் பங்கேற்பை (Volume & Liquidity) இணைத்து வாசித்தல்.
03 — Advanced Technical Context
Chart Patterns, Trendlines, Fibonacci மற்றும் Indicators-ஐ சிக்னல்களாக அல்லாமல் முடிவெடுக்கும் ஆதாரங்களாகப் (Decision Support) பயன்படுத்துதல்.
04 — Professional Trade Planning & Execution
Multi-Timeframe பகுப்பாய்வு, Volatility (ATR) மற்றும் Intraday, Swing & Positional வர்த்தகத் திட்டங்களைச் சுயமாக உருவாக்குதல்.
20 நாட்களுக்கான முழுமையான பாடத்திட்டம், செய்முறை பயிற்சி அரங்குகள் மற்றும் பகுப்பாய்வு நெறிமுறைகள்
MITS 360° MENTORSHIP PROGRAM
கற்றதை நடைமுறையில் தொடர்ந்து வழிநடத்தும் பயணம்
தொடர்ந்து Guidance
Course முடிந்த பிறகும், கற்றதை எப்படி தொடர்ந்து பயன்படுத்துவது என்பதில் வழிகாட்டுதல்.
Practical Application
வகுப்பில் கற்ற concepts-ஐ real market situations-ல் எப்படி apply செய்வது என்பதைப் புரிந்துகொள்ள உதவி.
Doubt Clarification
Market, charts, setups அல்லது learning process தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வாய்ப்பு.
Mistake Identification
ஒருவர் எங்கு தவறுகிறார் என்பதை கண்டறிந்து, அதை எப்படி சரி செய்வது என்பதில் guidance.
Market Reading Practice
Market-ஐ வெறும் பார்த்துக்கொண்டிருப்பதைத் தாண்டி, price movement மற்றும் market behaviour-ஐ புரிந்துகொள்ளும் practice.
Trade Review & Learning
எடுத்த முடிவுகளை பின்னர் review செய்து, என்ன சரியாக இருந்தது, எதை மேம்படுத்தலாம் என்பதை கற்றுக்கொள்ளுதல்.
Risk & Discipline Guidance
Capital protection, position sizing, risk management மற்றும் trading discipline போன்றவற்றில் தொடர்ந்து கவனம்.
Learning Roadmap
“அடுத்து என்ன கற்க வேண்டும்?” என்ற குழப்பம் இல்லாமல், தனிப்பட்ட learning journey-க்கு ஒரு தெளிவான direction.
Accountability
தொடர்ந்து கற்றல், practice மற்றும் review செய்வதில் consistency உருவாக்க உதவும் guidance.
Long-Term Development
ஒரு course-ஐ முடித்துவிடுவது மட்டுமல்லாமல், காலப்போக்கில் சுயமாக market-ஐ புரிந்துகொண்டு முடிவெடுக்கக்கூடிய திறனை வளர்த்துக்கொள்ள உதவுதல்.
யாருக்கு Mentorship?
Course-ஐ முடித்துவிட்டு, கற்றதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, வழிகாட்டுதலுடன் முன்னேற விரும்புபவர்களுக்கு. Beginner ஆக இருந்தாலும், Intermediate level-ல் இருந்தாலும், தொடர்ந்து கற்றுக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் விரும்புபவர்களுக்கு இந்த Mentorship உதவும்.
Operational Transparency & Optional Study Materials
நேரலை வகுப்புகள் (Google Meet)
வகுப்பில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு திட்டமிட்ட வகுப்புகள் நேரலையாக நடைபெறும். வகுப்புகளுக்கான கல்விக் கட்டணம் இல்லை.
பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் & கற்றல் வசதிகள்
நேரலை வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள், தங்களின் தொடர் குறிப்புகளுக்காகவும், எதிர்காலப் பயிற்சிக்காகவும் அந்தந்த அமர்வுகளின் முழுமையான வீடியோ பதிவுகள் மற்றும் ஆய்வுப் பொருட்களைப் பெற விரும்பினால் மட்டும் ₹499 பங்களிப்புக் கட்டணம் செலுத்தலாம்.
Corporate Transparency Clause
"இந்த ₹499 கட்டணம் என்பது பயிற்சியாளருக்கான கட்டணம் அல்ல. இந்த வகுப்புகளைத் தடையின்றி நடத்துவதற்கான வெப்சைட் ஹோஸ்டிங், சர்வர் பேண்ட்விட்த், இணையக் கட்டணம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக மட்டுமே பெறப்படும் ஒரு சிறிய நிர்வாகப் பங்களிப்பு. இது எவருக்கும் கட்டாயம் அல்ல; தேவைப்படுபவர்கள் மட்டுமே தேர்வு செய்யலாம்.இதன் நோக்கம் — இந்த கல்வி முயற்சி தொடர்ந்து இயங்கி, இன்னும் பல மாணவர்களை சென்றடைய ஒரு நிலையான அடித்தளத்தை உருவாக்குவது."
The Pay-It-Forward Protocol — Transforming Lives Together
ஆண்டு சமூகப் பங்களிப்பு மற்றும் தொடர் வழிகாட்டல் நெறிமுறை
முக்கிய விளக்கம் • Target Audience & Eligibility Mandate
1. ஆரம்பப் பயிற்சி (Initial Course Learning): MITS 360° Foundation மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு வகுப்புக் கட்டணம் முற்றிலும் இல்லை (100% Foundation Sponsored • ₹0 Tuition Fee).
2. இந்த சமூகப் பங்களிப்பு யாருக்கு?: பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, தங்களின் விருப்பத்தின் பேரில் "ஆண்டு முழுவதும் தொடர் வழிகாட்டல்" (Yearly Continuous Mentorship Program) பெற முன்வரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த வருடாந்திர சமூகப் பங்களிப்பு நெறிமுறை பொருந்தும்.
அனுமதிக்கப்பட்ட 5 நேரடி சமூகப் பங்களிப்பு வழிகள்
குறைந்தபட்ச சமூகப் பங்களிப்பு: ஆண்டுக்கு ₹1,000 (கூடுதல் தொகை வழங்குவது முற்றிலும் அவரவர் விருப்பம்)
அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகம்
நம்பகமான, பதிவுபெற்ற ஆதரவற்ற சிறுவர் இல்லங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு நேரில் அல்லது வங்கி/UPI மூலம் பங்களித்தல்.
நேர்மையான கல்வி டிரஸ்ட்
பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி/கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் படிப்புத் தேவைகளுக்கு உதவும் கல்வி அமைப்புகளுக்கு உதவுதல்.
முதியோர் இல்லம்
ஆதரவற்ற முதியோரைப் பாதுகாத்து பராமரிக்கும் நேர்மையான இல்லங்களுக்கு உதவுதல்.
மருத்துவ உதவி டிரஸ்ட்
சிகிச்சைச் செலவுகளுக்கு வழியின்றித் தவிக்கும் நோயாளிகளுக்கு நேரடி மருத்துவ உதவி வழங்கும் பதிவுபெற்ற அமைப்புகளுக்கு உதவுதல்.
நேரடி உணவு உதவி
வாய்ப்பும் நேரமும் உள்ளவர்கள், தங்கள் பகுதியிலேயே பசியில் இருக்கும் எளிய நபர்களுக்கோ சாலையோர மக்களுக்கோ தங்கள் கைகளால் நேரடியாகக் குறைந்தபட்சம் ₹1,000 மதிப்பிலான உணவை வாங்கி வழங்குதல்.
சமூகப் பங்களிப்பு உறுதிப்படுத்தல் நெறிமுறை (Proof Guidelines)
Strict Zero-Cash Rule: Mentorship சேர்க்கைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கும் வழிமுறைகள்
வங்கிப் பரிவர்த்தனை ரசீது / UPI Screenshot / Trust Receipt ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிவாகப் பகிர வேண்டும்.
எளிய மக்களுக்கு உணவு வழங்கியதற்கான நேரடிப் புகைப்படம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் (ஹோட்டல் பில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது).
Strictly Restricted
- மத/அரசியல் அமைப்புகள்: மதம், வழிபாடு அல்லது அரசியல் சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கப்படும் பங்களிப்புகள் இந்த முயற்சியில் சேர்க்கப்படாது..
- இடைத்தரகர்கள் / ரொக்கம்:நேரடியாக உதவி வழங்கும் நோக்கத்திலேயே இந்த முயற்சி செயல்படும். தனிநபர் intermediary-களுக்கு வழங்கப்படும் payments ஏற்கப்படாது
- சொந்த குடும்ப உதவிகள்: உங்கள் குடும்பத்தினர் அல்லது நெருங்கிய உறவினர்களுக்கான உதவிகள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது
- MITS 360° Foundation-க்கு நேரடி பணம் இல்லை: இந்த வகையான Pay-It-Forward contribution எந்த காரணத்திற்காகவும் MITS 360° Foundation-ன் கணக்கிற்கு செலுத்தப்படக்கூடாது.
Eligibility & Selection Priorities
100% ஸ்பான்சர் செய்யப்பட்ட நேரடிப் பயிற்சிக்கான தகுதி மற்றும் சேர்க்கை முன்னுரிமைகள்
Eligibility Requirements (யாருக்கு முன்னுரிமை?)
பொருளாதாரத் தேவையுள்ளவர்கள்
கல்விக்கான செலவை தனியாக ஏற்க சிரமம் உள்ள விண்ணப்பதாரர்கள்.
உண்மையான கற்றல் ஆர்வம்
பங்குச்சந்தை, முதலீடு மற்றும் நிதி அறிவை முறையாகக் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள்.
மாணவர்கள் & ஆரம்பநிலை கற்றலாளர்கள்
அடிப்படையிலிருந்து தங்கள் Market & Financial Knowledge-ஐ உருவாக்க விரும்புபவர்கள்.
தொடர்ந்து கற்கத் தயாராக இருப்பவர்கள்
வகுப்புகளில் முறையாக பங்கேற்று, practice மற்றும் learning activities-ல் தொடர்ந்து ஈடுபடுபவர்கள்.
நீண்டகால அறிவை விரும்புபவர்கள்
விரைவான லாபம் அல்லது tips-க்காக அல்லாமல், புரிதலையும் சுயமாக சிந்திக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள்.
பல்வேறு பின்னணியில் உள்ள ஆர்வமுள்ளவர்கள்
மாணவர்கள், இல்லத்தரசிகள், பணியாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட நிதி மற்றும் பங்குச்சந்தை அறிவை கற்றுக்கொள்ள உண்மையான ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்ட அனைவரும்.
Foundation Sponsored Batch Admission
முறையான சந்தைக் கல்வியைப் பெற உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பியுங்கள்
நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் • Quick 2-Minute Screening Form
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
MITS 360° Wealth Foundation என்றால் என்ன?
வணிக நோக்கமற்ற (Zero Commercial Greed), சமூகக் கல்விப் பங்களிப்பாக இயங்கும் ஒரு சுயாதீன அமைப்பு. நேரடி பங்குச்சந்தை அறிவை எளிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதே இதன் அடையாளம்.
இந்த Foundation-ன் முக்கிய நோக்கம் என்ன?
விலையுயர்ந்த கட்டணங்கள் இன்றி, கார்ப்பரேட் மற்றும் நிறுவன முதலீட்டாளர் தரத்திலான (Institutional Level) நேரடி சந்தை உத்திகளை எளிய மாணவர்களுக்கும் கொண்டு சேர்த்து, அவர்களைச் சுயசார்புடைய வர்த்தகர்களாக உருவாக்குவதே இதன் நோக்கம்.
யார் இந்த learning program-க்கு விண்ணப்பிக்கலாம்?
பங்குச்சந்தையை ஒரு வணிக ஒழுக்கத்தோடு கற்றுக்கொள்ளும் தீவிர ஆர்வமும், நேரத்தை ஒதுக்கத் தயாராக இருக்கும் அர்ப்பணிப்பும் கொண்ட எவரும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு கல்விக் கட்டணம் உள்ளதா?
இல்லை. இந்த நேரலை வகுப்புகள் 100% Foundation Sponsored. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு எவ்வித மறைமுகக் கட்டணமும் இன்றி முழுமையான கல்வி இலவசமாகவே வழங்கப்படுகிறது.
எந்தெந்த courses / learning tracks உள்ளன?
சந்தையின் அடிப்படைகள் முதல் Technical Analysis, Swing Trading, Smart Money Concepts (SMC) மற்றும் Volume Analysis வரை நேரடி சந்தை நடைமுறைகளை உள்ளடக்கிய முழுமையான பயிற்சிப் பிரிவு உள்ளது.
Beginner-களும் சேரலாமா?
தாராளமாகச் சேரலாம். பங்குச்சந்தைக்கு முற்றிலும் புதிய தொடக்கநிலையாளர்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து அடித்தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே market experience உள்ளவர்களும் சேரலாமா?
நிச்சயமாகச் சேரலாம். பல வருடங்களாகச் சந்தையில் இயங்கியும் தெளிவான Edge மற்றும் முறையான Risk Management இல்லாமல் தடுமாறுபவர்களுக்கு Institutional தரத்திலான புதிய புரிதலை இப்பயிற்சி தரும்.
Classes எப்போது மற்றும் எப்படி நடைபெறும்?
வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் நேரடி வகுப்புகளாகவே (Live Interactive Sessions) நடைபெறும். ஒரு பேட்ச் நிறைவடைந்த பிறகு அடுத்த பேட்ச் தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நமது தளத்திலேயே வெளியிடப்படும். இக்கல்விப் பணி தொடர்ந்து ஆண்டு முழுவதும் நடைபெறும்.
ஒரு batch-ன் duration என்ன?
பொதுவாக ஒரு மாத கால விரிவான நேரடிப் பயிற்சித் திட்டமாக (1 Month Comprehensive Live Training) இது நடத்தப்படுகிறது.
வகுப்பில் கலந்துகொள்பவர்களுக்கு ரெக்கார்டிங் வீடியோ கிடைக்குமா?
ஆன்லைன் வகுப்புகள் 100% Zero Fee. வகுப்பின் ரெக்கார்டிங், Study மெட்டீரியல்ஸ் மற்றும் டூல்ஸ் தேவைப்படுபவர்கள் மட்டும் விருப்பத்தின் பேரில் ₹499 செலுத்திப் பெறலாம். இத்தொகை சர்வர்கள், இணையதளப் பராமரிப்பு, டிஜிட்டல் டூல்ஸ் போன்ற மாதாந்திர செயல்பாட்டுச் செலவுகளுக்கும், எதிர்கால மாணவர் கல்விக்கும் மட்டுமே பயன்படுகிறது.
வகுப்பில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் வீடியோ ரெக்கார்டிங் வாங்கியே தீர வேண்டுமா?
இங்கு எதுவுமே கட்டாய கிடையாது! நேரடி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு 100% எந்த வித கட்டணமில்லாமல் கற்றுக்கொள்ளலாம். வகுப்புகளைத் தவறவிட்டவர்கள் அல்லது எதிர்காலத் தேவைக்காக Lifetime Recording Access, Study Materials & Tools தொகுப்பு தேவைப்படுவோர் மட்டுமே விருப்பப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம்.
Mentorship என்றால் என்ன? அது எப்போது தேவைப்படும்?
Mentorship என்பது வகுப்புகளுக்குப் பிறகான தொடர் நேரடி சந்தை வழிகாட்டல். இலவச வகுப்புகளை முடித்தவர்கள் இதை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சந்தையில் தொடர்ந்து வாழ்நாள் வழிகாட்டுதலும் (Lifetime Guidance) நேரடி சந்தை ஆய்வுகளும் தேவை என்று நினைப்பவர்கள் மட்டுமே விருப்பப்பட்டால் இதை நாடலாம்.
Mentorship contribution எப்படி Pay-It-Forward முறையில் வழங்கப்படும்?
இந்தத் தொகை MITS கணக்கிற்கோ அல்லது ஆசிரியருக்கோ செலுத்தப்படுவதில்லை. தளத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள பொதுநல மற்றும் சமூக நலப் பணிகளுக்கு மாணவர்கள் அத்தொகையை நேரடியாக வழங்கிவிட்டு, அதற்கான ரசீதைச் சமர்ப்பித்தாலே Mentorship அணுகல் வழங்கப்படும்.
வகுப்பிற்குப் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்குமா?
அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. வகுப்பின் தரத்தையும் தனிப்பட்ட கவனத்தையும் உறுதி செய்ய ஒரு பேட்சிற்கு குறிப்பிட்ட இடங்களே ஒதுக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அந்த பேட்சிற்கான இடங்கள் நிரம்பிய பின் மீதமுள்ள தகுதியான நபர்கள் காத்திருப்புப் பட்டியலுக்கு (Waiting List) நகர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு அடுத்த பேட்சில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.
நான் ஏதேனும் குறிப்பிட்ட புரோக்கரிடம் (Broker) டிமேட் கணக்கு தொடங்க வேண்டுமா?
கட்டாயமே இல்லை! குறிப்பிட்ட புரோக்கரிடம் தான் கணக்கு தொடங்க வேண்டும் என்ற எந்தவித நிர்பந்தமோ பரிந்துரையோ இங்கு கிடையாது. நீங்கள் விரும்பும் எந்தவொரு SEBI பதிவுபெற்ற புரோக்கர் மூலமாகவும் வர்த்தகம் செய்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட பிறகு மாணவர்களிடம் என்ன commitment எதிர்பார்க்கப்படுகிறது?
வகுப்புகளுக்குத் தவறாமல் நேரத்திற்கு வருவது, வழங்கப்படும் பயிற்சிகளை முறையாகச் செய்வது, மற்றும் சந்தை விதிகளை ஒழுக்கத்தோடு பின்பற்றுவது ஆகியவையே மாணவர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் ஒரே அர்ப்பணிப்பு (Commitment).
பயிற்சிக்கு லேப்டாப் / கம்ப்யூட்டர் அவசியமா? மொபைல் போன் மட்டும் போதுமா?
மொபைல் போன் மூலமாகவும் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியும். ஆனால், Chart Analysis மற்றும் Price Action உத்திகளைத் துல்லியமாகப் பார்த்துப் பழக லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இருப்பது கூடுதல் பலனளிக்கும்.
வகுப்புகள் எந்த மொழியில் நடத்தப்படும்?
வகுப்புகள் அனைத்தும் எளிய, நேரடிப் பேச்சுத் தமிழ் மற்றும் ஆங்கில பங்குச்சந்தை கலைச்சொற்கள் கலந்த (Tanglish) எளிய நடையிலேயே நடத்தப்படும். அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் பாடங்கள் விளக்கப்படும்.
இது SEBI பதிவுபெற்ற ஆலோசனை அமைப்பா? (Trading Tips / Calls வழங்கப்படுமா?)
இல்லை. MITS 360 Wealth Foundation என்பது 100% தூய கல்வி மற்றும் விழிப்புணர்வுக்கான தளம் மட்டுமே. நாங்கள் எந்தவிதமான Stock Tips, Buy/Sell Calls அல்லது முதலீட்டு ஆலோசனைகளையும் வழங்குவதில்லை. மாணவர்களைச் சுயமாக ஆய்வு செய்யும் திறன் கொண்டவர்களாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.
வகுப்புகளின் போது வரும் சந்தேகங்களை எப்படிக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்?
ஒவ்வொரு நேரலை வகுப்பின் இறுதியிலும் பிரத்யேக கேள்வி-பதில் நேரம் (Live Q&A Session) ஒதுக்கப்படும். அதில் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை ஆசிரியரிடம் நேரடியாகக் கேட்டு உடனுக்குடன் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.